தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50% பெண்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர்: அமைச்சர் பெருமிதம்

1 mins read
693689af-9cfe-44be-bdbe-e209f8391de1
டிஆர்பி ராஜா. - படம்: ஊடகம்

அரியலூர்: நாடும் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் ஐம்பது விழுக்காட்டினர் தமிழகத்தில்தான் பணிபுரிகின்றனர் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்திய அளவில் தொழில்துறையில் 13வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது முதலாவது இடத்துக்கு முன்னேறி உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழில் தொடங்குவதற்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்றார் அவர்.

“இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது,” என்றார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்