தமிழகத்தில் முதலீடுகள் அதிகரிப்பு

இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்து வந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரசின் முன்னெடுப்பு திட்டங்களான ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில் ஏற்கெனவே இது போன்ற கூட்டம் நான்கு முறை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் 5வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பதின்மூன்று துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வுகூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.

“தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் சில திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன. திட்ட பணிகளை துரிதமாகவும், தரமாகவும் நிறைவேற்றிட வேண்டும். திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

“இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மனந்திறந்து பாராட்டியதை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டில் அரசுப்பணிகள் சுனாமி வேகத்தில் நடந்து வருகின்றன. மதுரையில் கலைஞர் கருணாநிதியின் பெயரில் நூலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், வளமான மாநிலமாகவும் மாற்றிட வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட உயரிய லட்சியத்தோடு வீருநடை போட்டு கொண்டிருக்கும் நமது அரசுக்கு அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பை என்றென்றும் வழங்க வேண்டும்,” என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்தார்.

மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் ரூ.50 கோடி மதிப்பில் நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, பத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாயை கடனுதவியாக வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!