கோவை: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கோவையில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு நாள்தோறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அந்த அறக்கட்டளை நிர்வாகத்துக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு வாரத்தில் ஐந்து நாள்களுக்கு ‘ஒரு ரூபாய் மதிய உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஐந்து விதமான கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கானோர் இந்த உணவைப் பெற திரள்வதாகச் சொல்கிறார் அறக்கட்டளை மேலாளர்.
திங்கள் முதல் வெள்ளி வரை, மதிய வேளையில் ஒரு ரூபாய் மதிய உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தற்போது தினமும் 500 பேர் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
ஒரு ரூபாய் உணவுத் திட்டத்தின் மூலம் ஏழைகள் அளிக்கும் ஒரு ரூபாய் தொகையையும் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிடுவதாகக் கூறியுள்ளார்.


