தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளுக்கு ரூ.90 லட்சம்; மோசடிக்காரர்களுக்கு வலைவீச்சு

1 mins read
95632417-91e1-47e7-8cb0-a7dca290a220
படம்: - ஊடகம்

திண்டுக்கல்: ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்தால் ரூ.90 லட்சம் கழிவு தருவதாகக் கூறி பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஷாஜகான் என்பவரிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை ஒப்படைத்தால் கழிவுத்தொகையாகப் பெரும் பணம் கிடைக்கும் என்று சக்திவேல் என்பவரிடம் குணசேகர், ராஜசேகர் என்ற இரண்டு பேர் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.

அதையடுத்து சக்திவேல் ரூ.1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளுடன் கொண்டம்நாயக்கனூர் என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு ரூ.90 லட்சம் பணத்துடன் குணசேகர், ராஜசேகர், ஷாஜகான் மூவரும் காத்திருந்தனர்.

திடீரென சக்திவேல் அந்த மூவரையும் மிரட்டத் தொடங்கினார். கத்தியைக் காட்டி பயமுறுத்திய சக்திவேல் அந்த மூவரிடம் இருந்த ரூ.90 லட்சத்தைப் பறித்துக்கொண்டார். மூவரையும் ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு ஒரு காரில் சக்திவேல் தப்பி ஓடிவிட்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.

சக்திவேல் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட பலரையும் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்