சென்னை: தமிழில் பெயர்ப்பலகையை வைக்கும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்ப் பெயர்ப்பலகைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக இதை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“கடைகளுக்கான கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு கட்டணம் தண்டலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
“இந்த முடிவுக்கு வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. “வணிகப் பெயர்ப் பலகைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளன. எனவே, இத்தகைய சூழலை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

