தனக்கும் காலஞ்சென்ற ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்படுவதை நடிகை சாய் பல்லவி தரப்பு மறுத்துள்ளது.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ‘தேவரா’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஜான்வி. கடந்த ஓராண்டாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தில் சாய் பல்லவியும் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் ஜான்வி கபூர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை தனது குழுவினருடன் சேர்ந்து பார்த்துள்ளார் ‘தேவரா’ பட இயக்குநர் கொரட்டாலா சிவா. அப்போது ஜான்வி கபூர் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று உதவி இயக்குநர்கள் பலரும் பாராட்டினாலும், இதே கதாபாத்திரத்தில் சாய்பல்லவி ஒப்பந்தமாகி நடித்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
“சாய்பல்லவிதான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனினும் படத்தை இந்தியிலும் வெளியிட வேண்டும் எனில் ஜான்வி கபூர் நடிப்பது அவசியமாகிறது,” என்று விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் சிவா.
இந்தத் தகவல் அரசல் புரசலாக வெளியானதை அடுத்தே சாய் பல்லவி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
“எப்போதுமே நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் தேடிவரும். அதற்காக அவசரப்படவோ, பிறரது இடத்தைப் பிடிக்க ஆசைப் படுவதோ தேவையற்றது,” என்கிறார் சாய் பல்லவி.
மருத்துவப் படிப்பை முடித்துள்ள இவர் மிக விரைவில் திரையுலகை விட்டு விலகி மக்களுக்காக சேவையாற்றப் போவதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனவேதான் வாய்ப்புகளைப் பெறுவதில் சாய் பல்லவிக்கு நாட்டமில்லை என்கிறார்கள்.


