சென்னை: எக்காரணத்தைக் கொண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி தரப்புடன் இணைந்து செயல்பட்டதால் அனுபவித்த கொடுமைகளை ஓ.பன்னீர்செல்வம் இன்னும் மறக்கவில்லை என்று அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பலரும் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைந்து செயல்பட எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
“இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லியில் உள்ளவர்கள் கூறினாலும் அதை ஏற்க மாட்டோம். நாங்கள்தான் உண்மையான அதிமுகவினர்,” என்று மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.