ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைப்பு: நீதிமன்றத்தில் வழக்கு

1 mins read
01801aaa-86f1-463b-9274-e1bcd413d0cf
ஆளுநர் ஆர்என் ரவி. - படம்: ஊடகம்

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜியை நீக்கும்படி அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர், அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் எம்எல் ரவி என்பவர் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

“அரசியல் சாசனத்தின்படி எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது. தனது முடிவு குறித்து ஆளுநர் ஆலோசனைகள் பெற வேண்டிய அவசியமில்லை,” என்று எம்எல் ரவி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்