தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தக்காளி விலை மீண்டும் உயர்வு: சில்லறைக் கடைகளில் கிலோ ரூ.140க்கு விற்பனை

2 mins read
a2cd0e4e-a5ee-4b5a-9e59-ffbb4f6f0cd2
கடையில் விற்கப்படும் தக்காளி. - படம்: ஊடகம்

சென்னை: கடந்த இரு நாள்களாக குறைந்திருந்த தக்காளி விலை சென்னையில் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. எனவே அன்றாட சமையலில் தக்காளியைச் சேர்த்துக்கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் புலம்பத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான காய்கறிகள் டன் கணக்கில் வந்து சேர்கின்றன.

அவற்றைக் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், பின்னர் சில்லறை வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர்.

இந்நிலையில் அண்டை மாநிலங்களில் பெய்த கனமழை, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் அளவு சரிபாதிக்கும் குறைவாக சரிந்ததால் அவற்றின் விலை இருமடங்காக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதையடுத்து, விலை குறைப்புக்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.60ஆக குறைந்தது.

தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தக்காளி விலை மீண்டும் வெகுவாக அதிகரித்தது. மொத்த வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை நூறு ரூபாய்க்கும் சில்லறை வியாபாரிகள் ரூ.140க்கும் விற்றனர்.

சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.120ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

விலையைக் குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்