புதுடெல்லி: கேதர்நாத் கோயிலில் ஒரு பெண், தனது காதலனிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இளம்ஜோடி ஒன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து கோயில் முன்பு வைத்து சாமி தரிசனம் செய்வது போன்றும் பின்னர் அந்த இளம் பெண் தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காதலன் கைவிரலில் அவர் மோதிரமும் அணிகிறார்.
இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் பயனாளர்கள் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற காதல் செயல்கள் இடம்பெறக்கூடாது என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் ஏன் திறன்பேசிகளுக்கு தடை விதிக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதில் தவறாக எதுவும் இல்லை என்று சிலரும் பெரும்பாலோர் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் சர்சசையை ஏற்படுத்தியிருந்தாலும் ஒருசிலர் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.

