கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ள சிலர் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் சான்றிதழ்களையும் அவற்றின் உண்மைத் தன்மையையும் ஆய்வு செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும் என்று கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.