தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்: பழனிசாமி

1 mins read
cdc365a4-c1e7-4f42-aece-a16917ca2b53
ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள அதிமுகவின் மாநில மாநாட்டிற்கான சின்னத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தேர்தலின் போது தெளிவுபடுத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

புதன்கிழமை காலை சென்னையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரு பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

“அதிமுக- பாஜக கூட்டணி குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்; கூட்டணியில் இருப்பதாக கூறியிருக்கிறோம். ஆகஸ்ட்டில் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்” என்று திரு பழனிசாமி கூறினார்.

கூட்டத்தின் போது ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள அக்கட்சியின் மாநில மாநாட்டிற்கான சின்னத்தை அவர் வெளியிட்டார்.

தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கமாகவும் பெண்கள் நிறைந்த இயக்கமாகவும் அதிமுக திகழ்வதாக திரு பழனிசாமி குறிப்பிட்டார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் 22 நாள்கள் அதிமுக குரல் கொடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

திமுக ஆட்சியில் மருத்துவத்துறை நிர்வாகத் திறன் இன்றி சீரழிந்துவிட்டதாகவும் மருத்துவத்துறை நிர்வாகத் திறன் இல்லாமல் இருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

“அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனைகளை திமுக அரசு பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் திரு பழனிசாமி.

சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக அதிமுக உள்ளதாகவும் தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைக்கின்ற, அவர்களின் நலனுக்கு பாடுபடுவது தமது கட்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்