சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 200 நாள்களுக்குப் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 28ஆம் தேதி கொடியசைத்து அதனைத் தொடங்கி வைக்க இருப்பதாகவும் நாகராஜன் குறிப்பிட்டார்.
‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை நடக்கவுள்ளதாக அவர் சொன்னார்.
பாதயாத்திரை ராமேசுவரத்தில் தொடங்கி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வழி நடக்கும் என்றும் நாகராஜன் கூறினார்.