விபத்தில் உயிரிழந்த மகன், அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

விபத்தில் உயிரிழந்த மகன், அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

தமிழ்முரசு

06 Jul 2023 - 10:24 am

1 mins read

திருநின்றவூர்: சென்னையில் சாலை விபத்தில் மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஓட்டுநர் அஷோக் குமார் படுகாயமடைந்தார். 

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அஷோக்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அறிந்த அவரது தந்தை குப்பன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர். இந்தச் சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் தள்ளியுள்ளது. 

குறிப்புச் சொற்கள்