ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரை, மோசடி வழக்கு தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக ஆந்திர மாநிலக் காவல்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்நிலையில் காஜா மைதீன் ஷேக் என்ற 55 வயது ஆடவர் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். குடியுரிமை அதிகாரிகள் சோதனை முகப்பில் அவரது கடப்பிதழை அதிகாரிகள் சரிபார்க்கும்போது அவர், ஆந்திர காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.
அவர் மீது 2019ஆம் ஆண்டில் ஹைதராபாத் காவல்துறை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த அவர், வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்.