செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

படம்: ஊடகம்

07 Jul 2023 - 12:40 am

1 mins read

சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

மின்வாரியத்துக்கு பல்வேறு கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக மின்சார வாரிய தலைமை அதிகாரி ராஜேஷ் லகானி ஐஏஎஸ், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்