sat-IT-Raid-Govt-order06
திருச்சி: தமிழத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் உரிய விவரங்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதிகளில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு நடைபெற்ற நிலையில், அது குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ரூ.30 லட்சத்துக்கும் மேலான சொத்துகளைப் பதிவு செய்யும்போது அவை குறித்த விவரங்களை வருமானவரித்துறை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பதிவுத்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

