1,500 பெண்களை ரகசியமாக படம்பிடித்தவர் கைது

1 mins read
e1e4c805-3f97-46b5-8205-94f5462b736a
ஜெயந்திரன் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. - படம்: ஊடகம்

தேனி: நூற்றுக்கணக்கான பெண்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்த ஓட்டுநர் கைதாகி உள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், தன் மனைவியுடன் சாலையில் நடந்து சென்றபோது, ஜெயச்சந்திரன் என்பவர் தனது கைப்பேசியில் ரகசியமாக படம் எடுப்பதைக் கவனித்தார்.

இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, காவல்துறையில் புகார் அளித்தார் முருகன்.

ஜெயச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டபோது, பொது இடங்களில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் அவர் ரகசியமாக புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது.

மேலும், தனியார் பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருவதாகவும் 1,500 பேரை அவர் புகைப்படம் எடுத்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்