மாமனார்மீது சொத்து அபகரிப்பு வழக்கு: நயன்தாராவுக்கு நெருக்கடி

மாமனார்மீது சொத்து அபகரிப்பு வழக்கு: நயன்தாராவுக்கு நெருக்கடி

1 mins read
6e352ac6-402d-4d65-afc2-16f52a012f66
விக்னேஷ் சிவன், நயன்தாரா. - படம்: ஊடகம்

லால்குடி: நடிகை நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து மீது உறவினர்களை ஏமாற்றி சொத்துகளை அபகரித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லால்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், விக்னேஷ் சிவனின் தந்தை யாருக்கும் தெரியாமல் தங்களுடைய சொத்துக்களை அபகரித்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளதாக புகார் அளித்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய நால்வர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்தாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

புகார் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்