காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் உலக அளவில் முன்னிலை

1 mins read
18e5b2ce-f86b-4821-a36f-455eedd162c3
காற்றாலை - படம்: ஊடகம்

சென்னை: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் உலக அளவில் முன்னிலை வகிப்பதாக அனைத்துலக பொருளியல் அரங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

பசுமை மின்சக்தி உற்பத்தியில் சுவீடன், டென்மார்க், உள்ளிட்ட நாடுகளை தமிழகம் பின்னுக்குத் தள்ளி உள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பசுமை மின்சக்தி உற்பத்தியில் இவ்விரு நாடுகளும் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

“காற்றாலை மின் உற்பத்தியைப் பொறுத்தவரை தமிழகம் 7.9 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

“இத்துறையில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் பல்வேறு நாடுகளை தமிழகம் பின்னுக்குத் தள்ளி உள்ளது.

“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் சுவீடன் புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. தங்கள் நாட்டுக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் பெற வேண்டும் என்பதே சுவீடனின் இலக்காகும்.

“ஆனால், அந்நாட்டில் ஒட்டுமொத்த காற்றாலை மின்சார உற்பத்தி திறன் 6.7 கிகாவாட் மட்டுமே,” என்று அனைத்துலக பொருளியல் அரங்கு தெரிவித்துள்ளது.

நவீன காற்றாலை மின் உற்பத்தியின் பிறப்பிடமாக கருதப்படும் டென்மார்க் நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தியின் அளவு 5.5 கிகாவாட்ஸ் மட்டுமே. உலக அளவில் ஐந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா, கனடா, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டுமே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தை முந்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்