திண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 33 விழுக்காடு காடுகளாக இருக்க வேண்டும் என்றும் தற்போது 13 விழுக்காடு நிலப்பரப்பு மட்டுமே அவ்வாறு உள்ளது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரம் கிடைத்தால் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
“தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. விதையில் விஷம் தடவுவதால் தாய்ப்பால் நஞ்சாக மாறி வருகிறது.
“வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது தமிழர் களின் பண்பாடு. அதனை அரசு வேலையாக செயல்படுத்துவோம்,” என்றார் சீமான்.
கடற்கரையில் தலைவர் களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை ஏற்க முடியாது என்றும் தங்களிடம் அதிகாரம் வரும்போது அவை அகற்றப்படும் என்றும் சீமான் கூறினார்.
கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம் என்றார் அவர்.