கோவை: கோயம்புத்தூரில் ஈச்சனாரி பகுதியின் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் திங்கள்கிழமை காலை 11 மணியளவில், சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
காரில் இருந்து அதிகளவு புகை வெளியேறியதால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.