சென்னை: நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் என்பவர் பொதுமக்களுக்கு ஆயிரம் கிலோ தக்காளியை இலவசமாக விநியோகித்தார்.
இத்தகவலை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்ததில் அந்த இலவசத் தக்காளி விநியோகம் ஓரிரு மணி நேரங்களில் முடிந்து போனது.
பெண்கள், ஆண்கள், முதியோர் என நூற்றுக்கணக்கான மக்கள் இலவச தக்காளியை வாங்கிச் சென்றனர். இதுவரை 1,500 குடும்பங்களுக்கு 1,500 கிலோ தக்காளியை வழங்கி உள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழக உணவகங்களில் தக்காளியைக் கொண்டு சமைக்கும் உணவு வகைகளை அறவே தவிர்த்து வருகின்றனர்.

