திமுக எம்எல்ஏ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு

1 mins read
3808ed19-38ac-4a79-95c2-dc4cb25cf137
படம்: - தமிழ் முரசு

நல்லாத்தூர்: கடலூர் புறநகர்ப் பகுதியான நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், திருமண மண்டபத்தின் வாயிலில் தனது வாகனத்தில் இருந்து இறங்கி மண்டபத்தில் நுழையும்போது, அடையாளம் தெரியாத சிலர், அங்கு பெட்ரோல் குண்டு ஒன்றை வீசியெறிந்து சிட்டாய்ப் பறந்துவிட்டனர்.

தரையில் விழுந்த பெட்ரோல் குண்டு பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசியெறிந்துவிட்டு தப்பியோடியவர்களைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்