சென்னை: தமிழகத்தில் தக்காளியைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
வரத்து குறைந்தபடியால் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை இருநூறு ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், காய்கறிச் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.170க்கும் சின்ன வெங்காயத்தை ரூ.230க்கும் விற்பனை செய்வதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மற்ற காய்கறி களின் விலை சற்று குறைந்துள்ளதாகக் கூறப்படுவது பொதுமக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே காய்கறிகளின் விலை குறையும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தமிழக உணவகங்களில் தக்காளியைக் கொண்டு சமைக்கப்படும் உணவுவகைகள் தவிர்க்கப்படுகின்றன. அடுத்து வெங்காய உணவுவகைகளும் மாயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.