திண்டுக்கல்: தமிழ்வழிக் கல்வி யின் முக்கியத்துவத்தை பாடல்கள்மூலம் மாணவர் களுக்கு எடுத்துக்கூறும் பள்ளித் தலைமையாசியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்தர், பெரும்பாலும் பாடல்கள் பாடியே மாணவர்களுக்கு அனைத்தையும் புரிய வைக்கிறார்.
அண்மையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் புதிதாகப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் இனிப்பும் பூங்கொத்துகளையும் கொடுத்து வரவேற்ற திரு ஆர்தர், இம்முறை புதிய பாடலைப் பாடி அவர்களைக் கவர்ந்தார்.
“அரசாங்கப் பள்ளிக்கு வாங்க.. பிள்ளைகளை சேர்த்துவிட்டுப் போங்க..” என்று அவர் பாடிய பாடல் திண்டுக்கல் வட்டார மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர்தர், கடந்த 11 ஆண்டுகளாக தலைமையாசிரிய ராக உள்ளார்.
“எனது வகுப்பில் முக்கியமான பாடங்களைப் பாடல் மூலம் நடத்துவது எனது வழக்கம். திருக்குறள், பாரதியார் பாடல் களைப் பாடிக்காட்டி விளக்கம் அளிக்கும்போது அவை மாணவர்களின் மனத்தில் நன்கு பதியும்,” என்கிறார் தலைமை யாசிரியர் ஆர்தர்.
மேலும், பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழக அரசு செயல் படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆர்தர் தனது பாடல்கள் மூலம் மாணவர் களுக்கு விளக்குகிறார்.
“எங்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர், குடிநீர் சேகரிப்பு காரணமாக எங்கள் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை. இதனை மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர் களுக்குப் புரிய வைக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் போதிக்காமல், அவர்கள் சமூகப் பார்வையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களை உருவாக்கி வருகிறோம்,” என்கிறார் திரு ஆர்தர்.

