அமர்நாத் யாத்திரை: 12 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

அமர்நாத் யாத்திரை: 12 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

1 mins read
6105ca76-37eb-46b1-b6ef-4d98b472f521
அமர்நாத்தில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்கள். - படம்: ஊடகம்

புதுடெல்லி: அமர்நாத் யாத்திரை சென்ற தமிழர்கள் 12 பேர் அங்குள்ள பனிமலையில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து தங்களை மீட்கும்படி அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனிமலையில் இருந்தபடி அவர்கள் அனுப்பிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே 12 பேரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. 12 பேரும் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை மேற்கொள்வதாக சமூக ஊடகத்தில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாக காஷ்மீரில் கனமழை பெய்கிறது. மோசமான வானிலை காரணமாக கடந்த ஜூலை 8ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வானிலை ஓரளவு சீரடைந்ததால் யாத்திரை மீண்டும் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்