கற்றல், கற்பித்தல் குறித்து அறிய சென்னை வந்த அமெரிக்க ஆசிரியர்கள்

கற்றல், கற்பித்தல் குறித்து அறிய சென்னை வந்த அமெரிக்க ஆசிரியர்கள்

1 mins read
a50f9ac7-2186-4bbb-8d62-27387c1e352b
மாணவர்களுடன் உரையாடும் அமெரிக்க பள்ளி ஆசிரியர். - படம்: ஊடகம்

சென்னை: ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்த அம்மூவரும் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகள் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தனர்.

அமெரிக்க அரசு ‘புல்பிரைட் ஆசிரியர் பரிமாற்றங்கள்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளின் குடிமக்களுக்கும் இடையேயான புரிதலை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பயனுள்ள பாடங்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்