கலாஷேத்ரா பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தயார்

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தயார்

1 mins read
fd0968a0-c351-4f04-9e9f-64d5de82153d
ஹரிபத்மன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.

அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

கடந்த மார்ச் மாதம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் இவ்விவகாரம் குறித்து பல்வேறு செய்திகளை வெளியிடட்ன.

ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அறுபது நாள் சிறை வாசத்துக்குப் பிறகு பிணையில் வெளிவந்த நிலையில், அவர் மீதான வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி மகளிர் காவல்துறை குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது என்றும்

ஓரிரு நாள்களில் அது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
பாலியல்

தொடர்புடைய செய்திகள்