காமராஜர் பிறந்தநாளில் ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்பது மெய்ப்பட உழைப்போம் என முதல்வர் அழைப்பு

காமராஜர் பிறந்தநாளில் ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்பது மெய்ப்பட உழைப்போம் என முதல்வர் அழைப்பு

1 mins read
37ea9d1c-3cbf-4b13-a9fe-4e73535811b1
காலஞ்சென்ற காமராஜர் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். - படம்: ஊடகம்

சென்னை: காமராஜர் பிறந்தநாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று காலஞ்சென்ற முதல்வர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7,740 புத்தகங் களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி காமராஜரின் புகைப்படத்திற்கு பள்ளிகளில் மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்