லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

1 mins read
47876322-6e94-4fb0-9caf-ecb9824607b6
மகிதா. - படம்: ஊடகம்

செங்கல்பட்டு: மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற மகளிர் காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப் பதிவானது.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து வண்டலூர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா விசாரணை நடத்தி வந்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, ஏற்கெனவே அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்டபோது கருக்கலைப்பில் இரு மருத்துவர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. அவ்விரு மருத்துவர்களையும் அணுகிய ஆய்வாளர் மகிதா, மொத்தம் 12 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

இது குறித்து லஞ்சம் அளித்தவர்களில் ஒரு மருத்துவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், ஆய்வாளர் மகிதா, அவருக்கு உதவிய வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

முன்னதாக, ஆய்வாளர் மகிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்