‘கலைஞர் மகளிர் தொகை’: ஜூலை 20 முதல் விண்ணப்பம் விநியோகம்

1 mins read
bbed0b9a-7d67-45e0-b043-676900576249
மகளிர் உரிமைத் தொகை. - படம்: ஊடகம்

தமிழக அரசு அறிவித்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி உள்ளவர்கள் இத்திட்டத்துக்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிவிக்க நியாய விலைக்கடைகளில் பலகை அமைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள், டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் உள்ள பணியாளர்கள் விநியோகிக்க வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதில் தாம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்