சேலம்: தக்காளி விலை வெகுவாக அதிகரித்ததை அடுத்து, பலரும் அதை வைத்து சம்பாதித்து வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த முகமது காசிம் என்பவர் தலைக்கவசம் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், தன்னிடம் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
‘தலையைக் காக்க தலைக்கவசம் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகை ஒன்றையும் அவர் தன் கடையின் முன் வைத்துள்ளார்.
இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார் முகமது காசிம்.
ஒரு தலைக்வசத்தின் விலை ரூ.349. அத்துடன் ஒரு கிலோ தக்காளியையும் இலவசமாக வழங்குகிறார்.
வெள்ளி, சனி இரண்டு நாள்களுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.