சென்னை: கோவளம் கடற்கரையில் அலையாத்தி காடுகளை உருவாக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்து அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. “இந்நடவடிக்கை மூலம் கடற்கரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும், புயல் சீற்றம் தடைபடும். எனவே, அலையாத்தி காடுகள் காக்கப்பட வேண்டும்,” என சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கடற்கரை கழிமுகப் பகுதிகளான, உவர் நிலங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதும் புதிதாக அலையாத்தி மரக்கன்றுகளை வளர்ப்பதில் சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்டு வரும் பணிகளும் பாராட்டுக்குரியது.
“அலையாத்தி காடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை, சமூக ஆர்வலர்கள், கடற்கரை பகுதி கிராம மக்கள், மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்,” என்றார் மத்திய அமைச்சர்.


