கைப்பேசி மூலம் பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்து விற்பனை செய்த இளையர்

2 mins read
db872590-6950-49af-b662-65a349112bda
ஆர்யா. - படம்: ஊடகம்

ஈரோடு: கைப்பேசி மூலம் பெண்களை ஆபாச கோணங்களில் ரகசியமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட பணம் சம்பாதித்த இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்மையில் காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது பிரபல துணிக்கடைக்கு சென்றிருந்ததாகவும் அப்போது தனக்குத் தெரியாமல் யாரோ தன்னைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமது படத்தை ஆபாசமாக சித்திரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரைணையை அடுத்து, ஈரோட்டைச் சேர்ந்த ஆர்யா என்ற 22 வயது இளையர்தான் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

துணிக்கடை, பேரங்காடி, வணிக வளாகங்களுக்கு வரும் பெண்களை இவ்வாறு புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்து, அவற்றை டெலிகிராம் செயலியில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. மேலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை ஆபாச காணொளியாகவும் சித்திரித்துள்ளார்.

ஆபாசப் புகைப்படங்கள், காணொளிகளைப் பார்க்க ஆர்யாவுக்குப் பணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், அரை நிர்வாணப் படங்கள், முழுமையான காணொளிகளைப் பார்க்க வெவ்வேறு கட்டணங்களை நிர்ணயித்துள்ளார் ஆர்யா.

இந்த ஏற்பாட்டின் மூலம் அவர் லட்சக்கணக்கில் சம்பாதித்ததாகவும் மாறன் என்ற நண்பர் அவருக்கு இதில் உதவியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில் தன்னைப் போன்று மேலும் பலர் இவ்வாறு சம்பாதிப்பதாக ஆர்யா தெரிவித்ததை அடுத்து, காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்