நெகிழி தவிர்த்து விதையுடன் கூடிய காகித பேனா: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தமிழக இளையர்

திண்டுக்கல்: காகித பேனாக்கள் தயாரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்பும் தமிழக இளையரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

அந்தப் பேனாவின் பின்புறத்தில் இலவம் பஞ்சு, அரளி, பூவரசன் உள்ளிட்ட காட்டு மரங்களின் சிறிய விதைகளை வைப்பதாகவும் பேனாவை தூக்கி எறிந்தாலும் அந்த விதைகள் செடியாகி, மரமாகிவிடும் என்றும் இளையர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், அருகே அய்யம் பாளையத்தைச் சேர்ந்த இவர், பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். பொருளியல் வசதி இல்லாததால் ஏதேனும் சிறுதொழிலில் ஈடுபட முடிவு செய்தவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகித பேனா தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

“எனது குடும்ப உறுப்பினர்களே காகித பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் “பால்பாய்ண்ட் பேனாக்கள், நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

“காகித பேனாக்கள் 99.5% நெகிழி கலப்பு இல்லாதது. இவற்றை தூக்கி எறிந்தாலும் மக்கிவிடும். மேலும் சிறப்பம்சமாக காகித பேனாவின் பின்புறம் உள்ள மாத்திரை குமிழியில் விதைகளை வைக்கிறோம்.

“மண்ணில் விழுந்தாலும் அந்த விதை முளைப்புதிறன் பெற்று செடி, மரமாக வளர்ந்துவிடும்,” என்கிறார் சிவபாலன்.

ஒரு காகித பேனாவின் விலை ஐந்து ரூபாய் என்று விலை நிர்ணயித்துள்ளதாகவும் இணையம் வழியும் விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது காகித பேனாக்களை பரிசளிக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் இளையர் சிவபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!