6 மாவட்டங்களின் 25 வட்டாரங்களில் மிதமான வேளாண் வறட்சி: தமிழக அரசு அறிவிப்பு

6 மாவட்டங்களின் 25 வட்டாரங்களில் மிதமான வேளாண் வறட்சி: தமிழக அரசு அறிவிப்பு

1 mins read
4fcc1872-086b-4b3b-9047-20c8f711d8d0
கடந்து ஆண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவால் 33 சதவீதத்துக்கு மேலாக பயிர் சேதம் ஏற்பட்ட 25 வட்டாரங்களை ‘‘மிதமான வேளாண் வறட்சி’‘ கொண்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.   - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவால் 33 சதவீதத்துக்கு மேலாக பயிர் சேதம் ஏற்பட்ட 25 வட்டாரங்களை ‘‘மிதமான வேளாண் வறட்சி’‘ கொண்டவையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் குறைவான மழைப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக பயிர்கள் வாடியதைத் தொடர்ந்து, 33% மற்றும் அதற்கு மேல் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் 25 வட்டாரங்கள் “மிதமான வேளாண் வறட்சியால்” பாதிப்புக்கு உள்ளானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில்,மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆள்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்கள் “மிதமான வேளாண் வறட்சியால்” பாதிப்புக்கு உள்ளானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்