மும்பை: மீன் தொட்டியில் முதலைக் குட்டியை செல்லப் பிராணியாக வளர்த்து வந்த ஆடவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தின் ரபெலி பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவரது வீட்டில் முதலைக் குட்டி வளர்க்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், மீன் தொட்டியில் முதலைக் குட்டியை வளர்த்து வருவது உறுதியானது.
இதையடுத்து முதலைக்குட்டியை மீட்ட அதிகாரிகள், அதனை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதமானது என்பதால் ஆடவரைக் கைது செய்த வனத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அண்மையில் கடற்கரைக்கு மீன்பிடிக்கச் சென்றபோது முதலைக் குட்டி பிடிபட்டதாகவும் அதனை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருவதாகவும் கைதான ஆடவர் தெரிவித்துள்ளார்.