மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மதுரையில் மலை மீது ஆர்ப்பாட்டம்

1 mins read
8779dcbf-9cab-4f05-adf1-be8d5ce1ef58
மலை மீது ஏறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். - படம்: ஊடகம்

மதுரை: மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி மதுரை அருகே மலை மீது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாத்திரம் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது வன்முறையை கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சாடினர்.

மத்திய அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனிடேய மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திமுக மகளிரணி அறிவித்துள்ளது.

“தாய்மையை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பாஜக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்தப்படும்,” என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்