சென்னை: ஜி20 பணிக்குழுக் கூட்டம் நடைபெறுவதை அடுத்து ஜூலை 24 முதல் 26ஆம் தேதிவரை சென்னையில் ஆளில்லாத சிறிய ரக வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்குழுக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், அவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள், அவர்கள் செல்லும் வழித்தடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் ‘சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் ஆளில்லா வானூர்திகள், கண்காணிப்பு, படம் பிடிக்கும் கருவிகள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை மீறிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

