சென்னையில் மழை நீர் தேங்குவது 60 விழுக்காடு குறைந்துள்ளது

1 mins read
ec28d8e4-e33b-40fc-894c-faa97fc48f00
தமிழக அமைச்சர் சேகர் பாபு - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் மழை பெய்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்துவந்த அந்த நிலைமை 60 விழுக்காடு வரை இப்போது குறைந்துள்ளது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது,” என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

மழைநீர் வடிகால் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், “பருவ மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

எஞ்சியுள்ள பணிகள் 85 கிலோ மீட்டருக்கான மழை நீர் வடிகால் பணிகள் மட்டுமே. இந்தப் பணிகள் 248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவுறும். வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறும்போது போக்குவரத்துக்கும் மக்களுக்கும் எவ்விதத்திலும் இடையூறு ஏற்படாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்