ஜி 20 கூட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

ஜி 20 கூட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

1 mins read
ae727a31-09ac-46c7-bacd-5ef65c5d1b1d
ஜி 20. - படம்: ஊடகம்

சென்னை: ஜி-20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் உறுப்பினர்கள் கமல் கிஷோர், பேரிடர் அபாய தணிப்பு குழுவின் முதல்இரு கட்ட கூட்டங்கள் குஜராத் மாநிலம் காந்தி நகர், மும்பை ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட்டது என்றார்.

“தற்போது இறுதிக்கட்ட கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதில் துரித முன்னெச்சரிக்கை, பேரிடர்கால நிதி மேம்பாடு, கடல் பேரிடர்கால மீட்பு நடவடிக்கை, பேரிடர்கால மீட்புக்கான உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்,” என்றார் கமல் கிஷோர்.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அதுசார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ள இந்த கூட்டம் நல்வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்