வரி வசூல் செய்வதில் தமிழகம், புதுவைக்கு நான்காம் இடம்

வரி வசூல் செய்வதில் தமிழகம், புதுவைக்கு நான்காம் இடம்

1 mins read
5bbab2d9-accb-4756-a962-12a827b50144
இந்திய வருமான வரித்துறை. - படம்: ஊடகம்

சென்னை: வருமான வரி வசூலிப்பதில் தமிழகம், புதுவை மாநிலங்கள் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளன. சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் இத்தகவலைத் தெரிவித்தார்.

நேரடி வரிவசூல் என்பது மத்திய அரசின் முக்கிய வருவாய்களில் ஒன்றாகத் திகழ்வதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

“கடந்த 2022-23ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு, புதுவையில் ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும். இந்திய அளவில் வரி வசூல் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் புதுவையும் நான்காம் இடத்தில் உள்ளன,” என்று சுனில் மாத்தூர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்