இதுவரை 150,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது: அமைச்சர் தகவல்

இதுவரை 150,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது: அமைச்சர் தகவல்

படம்: ஊடகம்

26 Jul 2023 - 1:03 pm

1 mins read

நீலகிரி: தமிழகத்தில் இதுவரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒன்றரை லட்சம் இளையர்க்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இதுவரை 102 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருப்பது போல் தமிழ்நாட்டில் 71 இடங்களில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள் ரூ.2877 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன.

“சென்னையில் நடந்த முதலாவது வேலைவாய்ப்பு முகாமை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் நூறு பெரிய வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்,” என்றார் அமைச்சர் கணேசன்.

குறிப்புச் சொற்கள்
அமைச்சர்