திருச்சி: திருச்சி மாநகரம் திமுகவின் கோட்டை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமிட்டது என்றார்.
“திருச்சிக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திமுகவின் கோட்டை திருச்சி. பயிற்சி பாசறைக் கூட்டத்திற்கு வந்துள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
“சமூக ஊடகங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. திமுகவின் வரலாறு, அடிப்படைக் கொள்கைகள் திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதை மனதிற்கொள்ள வேண்டும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

