முட்புதர்களை அகற்றியபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் காயம், விசாரணை

1 mins read
46d0e87c-dbfe-40d9-b5a4-8cd5b152872f
கைப்பற்றப்பட்ட வெடிக்காத இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை நிபுணர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். - படம்: தமிழக ஊடகம் 

திருப்போரூர்: செங்கல்பட்டு அருகே இருக்கும் திருப்போரூர் நகரை அடுத்துள்ள தண்டலம் என்ற கிராமத்தில் ஐந்து மாதமாகச் செயல்படாமல் கிடக்கும் ஓர் ஆலையைச் சுற்றிலும் மண்டியிருந்த முட்புதர்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வந்தது.

நான்கு தொழிலாளர்கள் புதர்களை வெட்டி அகற்றியபோது திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இரண்டு பேர் காயமடைந்தனர்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

வெடிக்காமல் கிடந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

அந்தக் குண்டுகள் அந்த இடத்திற்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் காயமடைந்தார். இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் அப்போது கைப்பற்றப்பட்டன.

திருப்போரூருக்கு அடுத்த இள்ளலூர் என்ற ஊரில் சில மாதங்களுக்கு முன் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் இப்போது நாட்டு வெடிகுண்டுகள் சிக்கி இருப்பதால் அதிகாரிகள் புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்