மாமனார், மருமகள் சண்டை: சமரசம் செய்தவர் கட்டடத்தின் மீது குண்டு வீச்சு

1 mins read
6c28bbf1-bc75-4d7f-9768-133467b1f504
படம்: - தமிழ் முரசு

சிவகங்கை: சொத்துப் பிரச்சினை காரணமாக சப்பாணி என்பவருக்கும் அவரது மருமகள் தேவி என்பவருக்கும் அடிக்கடி சண்டை மூளும். சில சமயம் அவர்களுக்குள் வாய்ச்சண்டை நீண்டு பின்னர் கைகலப்பில் முடிவதுண்டு.

சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் வழக்கமாக நடக்கும் அவர்களது சண்டையை அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் சமசரம் பேசி தீர்த்து வைத்தனர். இருந்தும் அவர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. பிரச்சினையைத் தீர்த்துவைக்க இருவருமே காவல்துறையின் உதவியை நாடினர். அதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மாமனார், மருமகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியது. அப்போது சமசரம் செய்துவைத்த மகாமுனி என்பவர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அவருக்குச் சொந்தமான வணிக வளாகக் கட்டடத்தில் நள்ளிரவில் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கிடந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன. அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்