சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில்தான் பாத யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. அமித்ஷா மணிப்பூருக்குச் சென்று ஏன் அமைதி யாத்திரையை தொடங்கி வைக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித்ஷா பேசியுள்ளார். குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான் பாஜக அமைச்சரவையில் உள்ளனர். குற்ற வழக்குகள் கொண்ட பாஜக எம்.பி.க்கள் குறித்து பிரதமரிடம் கேட்க அமித்ஷாவிற்கு துணிச்சல் உண்டா?,” என்றார்.

