தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்: அம்பலப்படுத்திய காணொளி

2 mins read
ec0f780f-518f-42e7-9267-0400cf6b03e4
லஞ்சம் பெற்ற கல்லூரி முதல்வருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. - படம்: ஊடகம்

தேனி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவகத்துக்கான குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இணைப்பு கொடுக்க பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேனி காவல்துறையில் புகார்்் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் பெறுவது போன்ற காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

வேறு சில காரணங்களுக்காகவும் முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் பெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரிடம் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் பெறும் காணொளியைக் கண்டவர்கள், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் பத்தாயிரம் பேர் வந்து செல்லும் நிலையில், அவர்களின் உணவுத் தேவைக்காக உணவகம் ஒன்றும் சிறிய சிற்றுண்டிக் கூடங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் உணவகத்தின் குடிநீர் குழாய் இணைப்பு சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளரிடம் மீண்டும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமக்கு பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கோரியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் லஞ்சம் பெறும் காணொளி காட்சி வெளியாகி உள்ளது. அதில் குடிநீர் இணைப்பின்றி தம்மால் உணவகத்தை நடத்த முடியவில்லை் என மாரிச்சாமி என்பவர் பேசுவதும் பதிவாகி உள்ளது.

குடிநீர் இல்லாமல் மாணவர்களும் நோயாளிகளும் சிரமப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூபாய் 16 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,

குறிப்புச் சொற்கள்