நாகை: நடுக்கடலில் மீன்பிடி படகில் தத்தளித்த நாகை மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.
இரு நாள்களாக கடலில் தவித்த 36 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களும் மோசமான வானிலை காரணமாக கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்தனர்.
மேலும் ஒரு படகில் இன்ஜின் கோளாறும் ஏற்பட்டது. இந்நிலையில் கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் மீனவர்களைக் கண்டனர். பின்னர் அனைவரையும் பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.


